Saturday 27th of April 2024

English Tamil
Advertiesment


இலங்கையின் புதிர்கள்


2019-10-12 7709

தனக்கு முன்னால் இருந்த சட்டத் தடையொன்றினை வெற்றிகரமாக எதிர்கொண்ட பொது ஜன பெறமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவினையும் தாக்கல் செய்வதுவிட்டார். குறித்த சட்ட ரீதியிலான தடையினை கோத்தாபய வெற்றிகொண்டமையானது அவரது ஆதரவாளர்களை அசாதாரண அளவில் பூரிப்படையச் செய்துவிட்ட போதிலும் கோத்தாபயவின் முன்னால் இருக்கின்ற சட்டப் பிரச்சினைகள் அனைத்துமே தீர்ந்துவிடவில்லை என்பதனை அவர்களில் பலர் இன்றும் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

கோத்தாபயவவுடன் தொடர்புடைய சட்டப் பிரச்சினைகள் அனைத்துமே மிக இலகுவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதாக கருதிவிடமுடியாது. இரட்டைப் பிரஜாவுரிமையாது வழமையை விட துரித வேகத்தில் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. குறித்த விண்ணப்பத்திற்கான அனுமதி ஜனாதிபதி மூலமாக வழங்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் முறையாக அமைந்திருப்பதாக உறுதிப்படுத்த முடியவில்லை. அது மாத்திரமன்றி அவரது விண்ணப்பத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் எதுவுமே குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் இருக்கவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதியின் அனுமதி வழங்கப்படுதல் என்பதானது இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கையின் ஒரு செயன்முறை மாத்திரமே என்பதுடன் அதற்கு முந்தைய நடைமுறைகள் அனைத்துமே சட்டபூர்வமாக அமைந்திருத்தால் மாத்திரமே ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுகின்ற அனுமதி வழங்கப்படுகின்ற செயன்முறை சட்டரீதியானதாக அமையூம்.

சீ.ஐ.டீ பரிசோதனைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களில் சிலதைத்தவிர தவிர முழுமையான விபரங்கள் குறித்த முறைப்பாட்டில் உள்ளடக்கப்படவில்லை என்பது தெரியவருகின்றது. கோத்தாபயவினது அடையாள அட்டையுடன் தொடர்புடைய ஆவணங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வசம் காணப்பட்வில்லை என்ற போதிலும் விண்ணப்பத்துடன் தொடர்புடைய லொக் பதிவுப் புத்தகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதில் அடங்கியிருந்த விபரங்கள் குறித்து முறைப்பாட்டாளர் அறிந்திருந்ததாக தெரியவில்லை. கடவுச் சீட்டு பெறுவதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரதி ஒன்றினையும் சீ.ஐ.டீ கண்டெடுத்திருந்தது.

குறித்த விண்ணப்பத்தில் தன்னை ஒரு கணனி பொறியிலாளர் என்பதாக கோத்தாபய குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க குடியுரிமை கிடைக்கப்பெற்றதுடன் கோத்தாபயவின் முதலாவது அடையாளஅட்டை (491724021V) செல்லுபடியற்றதாக ஆகிவிடுகின்றது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு புதிய அடையாள அட்டை (19491721001) ஒன்றினைப் பெற்றிருந்தபோதிலும் 2017, 2018, 2019 ஆகிய வருடங்களுக்குறிய வாக்காளர் பதிவுகளுக்காக புதிய அடையாள அட்டையின் தகவல்கள் பதியப்படாமல் பழைய (செல்லுபடியற்றதாகிய) அடையாள அட்டையின் தகவல்களே பதியப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாகவும் முறைப்பாட்டாளர் அறிந்திருந்ததாக தெரியவில்லை.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது என்பது எனது அபிப்பிராயமாகும். அவ்வாறு சந்தர்ப்பம் வழங்குவதானது தேர்தல் முறைமையானது சிதைவடைவதற்கு காரணமாக அமைந்துவிடலாம். பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ததாக எங்கும் கேள்விப்பட்டதில்லை என்பதுடன் இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நடைபெறுகின்ற முதலாவது தடவையாக இது வரலாற்றில் இடம்பிடிக்கப்போகின்றது.

பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் அரசின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க அரசின் ஆகக்குறைந்த படித்தரத்திலுள்ள பதவிக்குக் கூட இவ்வாறானவர்கள் நியமிக்கப்படுவதில்லை. அரச சேவையில் இருக்கின்ற ஒருவர் ஏதேனுமொரு பாரதூரமாக குற்றச்சாட்டுக்குள்ளாகுவாராயின் அவருக்கு சேவைத்தடை விதிக்கப்படுகின்ற நடைமுறையொன்றே பின்பற்றப்பட்டுவருகின்றது. அரச சேவையில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இது போன்ற இறுக்கமான நடைமுறையொன்று பின்பற்றப்படுகின்றதாயின் பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு இடமளிப்பது என்பது எந்தவகையில் நியாயமானதாக அமையமுடியூம்?

அரசியல் பழிவாங்கல் என்ற அடிப்படையில் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டிருப்பதாக அவர்கள் கருதுவார்களாயின், ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக எதிர்பார்க்கும் வேட்பாளர் என்ற அடிப்படையில் குறித்த வழக்குகளை அவசரமாக விசாரித்து முடிவுக்கு கொண்டுவருமாறு நீதிமன்றத்தைக் கோரியிருத்தல் வேண்டும். இதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னராக தனது நிரபராதித் தன்மையினை நிரூபித்திருக்கலாம். இந்த தவறான முன்னுதாரணமானது இலங்கையின் தேர்தல் முறைமையில் ஒரு கரும்புள்ளியாக அமைவதனை யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகலாம்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிகொண்ட போதிலும், அது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு அடுத்த பொதுத்தேர்தலுக்கு உந்துதலாக அமையுமே தவிர நாடு தற்போது எதிர்நோக்குகின்ற எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையப் போவதில்லை.

இலங்கையின் இன்றைய பிரச்சினை

இலங்கையில் காணப்படுகின்ற ஊழல் மிக்கதும் வக்கிரமானதுமான அரசியல் முறைமையில் நல்லதொரு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தது முதலே ஆரம்பித்திருக்கவேண்டும். அந்தக் காலப்பகுதியில் சமூக கட்டமைப்பானது முழுமையாக வீழ்ச்சியடைந்த நிலையிலேயே காணப்பட்டது. அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் நிலைகூட ஊழல் நிறைந்து செயற்திறன் குன்றிய அடிப்படையிலேயே காணப்பட்டது. சமூக மற்றும் அரசியல் ரீதியாக வீழ்ச்சிகண்ட நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் அடிப்படையிலான மாற்றமொன்றை உருவாக்குவதற்கான சிறந்ததொரு கட்டமைப்பு மாற்றத்தினை ஏற்படுத்துவதனைத் தவிர வேறு மாற்றீடுகள் இல்லை என்பதனை யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவரும் அன்றைய அரசாங்கமும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்த காலப்பகுதியில் காணப்பட்ட பிரச்சினைகளை விடவும் அதிகளவிலான பிரச்சினைகளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாடு எதிர்கொள்ள நேர்ந்ததுடன் ராஜபக்ச அரசாங்கம் தோல்வியடைவதற்குக் கூட இதுவே காரணமாக அமைந்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அராங்கம் மீள்கட்டமைப்பு என்ற பேரில் காலம் கடத்தியதே தவிர உண்மையான மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இவற்றின் பிரதிபலனாக இருந்த பிரச்சினைகள் சிறுகச் சிறுக வளர்ச்சி கண்டு பாரியதொரு பிரச்சினையாக மாற்றம்கண்டிருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடப்போவதில்லை. சிறந்த கட்டமைப்பு சார்ந்த மாற்றம் ஒன்றிற்கான அடித்தளம் அமைத்தல் ஊடாக மாத்திரமே இலங்கை தற்போது முகம்கொடுக்கின்ற இந்த பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமாக அமையும்.

சமூகத்தைக் கட்டியெழுப்புதல் என்பதே இந்த மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைதல்வேண்டும். ஊழல் காரணமாக வீழ்ச்சியடைந்து காணப்படுகின்ற அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றின் கட்டமைப்புகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது இந்த செயற்திட்டத்தின் அடுத்தகட்ட குறிக்கோளாக அமைய வேண்டும்.

சமூகத்தைக் கட்டியெழுப்புதல்.

அரசாங்கம் ஒன்று நிலைத்திருப்பதில் சமூகக் கட்டமைப்பானது பாரிய செல்வாக்கு செலுத்துவதாக காணப்படுகின்றது. மிக நீண்ட காலமாக அந்நிய நாடுகளின் ஆக்கிரப்பின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையுடன் இணைந்ததாக சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியூம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்திய நாடு சுதந்திரத்தினை வென்றெடுக்கும் போது இந்த செயன்முறையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது. இலங்கை சுதந்திரத்திற்காக பாரிய முயற்சியினை மேற்கொண்ட ஒரு நாடு என்பதாக குறிப்பிடமுடியாது. இலங்கையின் சுதந்திரத்திற்காக பாரிய போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் பரிசளிப்பது போன்ற அடிப்படையில் சுதந்திரம் கிடைக்கப்பபெற்றது.

அதன் காரணமாக சுதந்திரத்தினை வென்றெடுப்பதற்காக சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டிய தேவைப்பாடு ஏற்படவில்லை என்பதுடன் சுதந்திரம் கிடைத்த பின்னர் கூட சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணிகள் என எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. ஜாதி, இனம், மதம் போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதுடன் இந்த வேறுபாடுகளின் வெளிப்பாடாக கலவரங்களோ பிணக்குகளோ ஏற்படாத வகையில் அனைத்து மக்களுக்கும் சமமான அங்கீகாரமும் சமமான உரிமைகளும் கிடைக்கின்ற அடிப்படையில் சமூகத்தில் ஒற்றுமையை எற்படுத்துவதற்கான செயற்பாட்டினையே சமூகத்தைக் கட்டியெழுப்புதல் என்ற பதம் குறித்து நிற்கின்றது. சமூகத்தினைக் கட்டியெழுப்பத் தவறியதன் விளைவாகவே பயங்கரமான இனக்கலவரத்தின் மூலமாக இலங்கை சுமார் முப்பது ஆண்டுகளாக இரத்தம் ஓட்டும் நாடாக இருந்துவந்தது. தொடராகவே கலவரங்கள் இருந்துவந்தத காரணத்தினால் நீண்ட காலமாக இருந்துவந்த ஒழுக்கமற்ற சூழல் இன்னும் இன்னும் விகாரமடைந்து அரச நிறுவனங்கள் கூட ஊழல் மிக்கதாகவும் விகாரமான கட்டமைப்புடையதாகவும் மாறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.

உள்நாட்டு யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து சமூக கட்டமைப்பிலும் அரசியலிலும் ஏற்பட்டிருந்த விகாரத் தன்மைகளை இல்லாமலாக்கும் நோக்கில் அரசாங்கம் மற்றும் சமூக கட்டமைப்பினை சீர்படுத்துவதற்கான முறையான திட்டங்களை அமைக்காமையின் விளைவாக சமூகம் மற்றும் அரசாங்கம் என்பவற்றின் வீழ்ச்சியின் வேகம் பன்மடங்குகளாக அதிகரிக்கத்துவங்கியது.

சந்தர்ப்பத்தினை நழுவவிடல்.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததனைத் தொடர்ந்து கட்டமைப்பு ரீதியான புனர்நிர்மாணம் ஒன்றின் ஊடாக சமூகம், அரசியல் என்பன மீள்கட்டமைக்கப்படும் நடைமுறையொன்று மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் இலங்கையின் வரலாறு வித்தியாசமான விதமாக எழுதப்பட்ட வாய்ப்பாக அமைந்திருக்கும். அவ்வாறு அமைந்திருக்குமாயின் தற்போது புல்டோசர் இடப்பட்ட நிலையில் இருக்கின்ற தமிழர்களின் உள்ளக் குமுறல்களுக்கு காதுகொடுப்பதுடன் அடுத்தவர்களினதும் குமுறல்களுக்கும் காதுகொடுத்து ஜாதி, இன, மத அடிப்படையிலான யுத்தமொன்று மீண்டும் உருவாகாமல் இருக்கும் விதத்திலான இலங்கையர் சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கும். அவ்வாறான ஏற்பாடுகள் நடைபெறாமையினால் சிங்கள தமிழ் பிரிவினையானது தற்காலிமாக புதையுண்டு சிங்கள முஸ்லிம் பிரிவினைவாதம் தலைதூக்கியிருக்கின்றது.

சிங்கள இனத்தவர்கள் மனதில் முஸ்லிம் இனத்தவர்கள் குறித்து குரோதத்தினையும் வைராக்கியத்தையும் உண்டாக்குவதன் ஊடாக இந்த இனவதாதத்திற்கான அத்திவாரம் இடுகின்ற செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக எந்தவிதத்திலுமே உண்மையில்லாததும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான கட்டுக்கதைகளை உருவாக்கப்பட்டதுடன் அவற்றை சிங்கள மக்கள் ஆராய்ந்து பார்க்காமல் ஏற்கவும் செய்தனர்.

இந்தக் கலவரம் முதலாவது முறையாக வெடிக்க ஆரம்பித்தது 2014 ஆம் ஆண்டு அலுத்கம மற்றும் பேருவல பிரதேசங்களிங்களிலாகும். இந்தத் தாக்குதலின்போது முஸ்லிம் இனத்தவர்கள் மரணத்தைத் தழுவிக்கொண்டதுடன் முஸ்லிம்கள் பாரிய தொகையினரின் உடைமைகள் அழிவுக்குள்ளாக்கப்பட்டன. அடுத்து கண்டி திகன பகுதியில் இரண்டாது முறையாகவும் இனக்கலவரம் வெடித்தது. இரண்டு முஸ்லிம்கள் மரணத்தைத்தழுவியதுடன் பாரிய அளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் என்பனவற்றை இலக்காகக் கொண்டு உயிர்த்த ஞாயிறுதினம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மூலமாக கடுமையான முஸ்லிம் பயங்கரவாதத்தினை முதன் முதலாக இலங்கையில் காணநேர்ந்தது. இதன் ஊடாக உருவாகவிருந்த கத்தேவலிக்க – முஸ்லிம் கலவரத்தினை தடுத்து நிறுத்துவதற்காக கத்தோலிக்க ஆலயங்கள் ஊடாக எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்கள் வெற்றிகண்ட போதிலும் சிங்கள முஸ்லிம் கலவரம் உச்ச அளவில் உருவெடுக்க மேற்படி தாக்குதல் காரணமாக அமைந்தது. சிலாபத்தில் ஆரம்பமான கலவரம் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகள் வரை வியாபித்தாலும் அது நாடு முழுவதும் வியாபிப்பதற்காக சிங்கள சமூகம் இடம்கொடுக்கவில்லை. நாட்டில் நடைபெற்ற கலவரங்கள் சிங்கள இனத்தவர்களது எண்ணப்பாட்டில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த காரமாக அமைந்திருக்கின்றது என்பதனை இதன் ஊடாக அறியமுடிகின்றது.

வெடிப்பதற்கு அண்மித்த நிலை

ஜாதி, இனம், மதம் என்ற ஏதாவது ஒன்றின் ஊடாக எப்போது வேண்டுமானாலும் பாரிய கலவரம் வெடிக்கலாம் என்ற பாரதூரமான நிலையே இன்றை சமூகத்தில் காணப்படுகின்றது. செப்டம்பர் மாதத்தில் மரணமெய்திய குருகந்த விகாரையின் தலைமை விகாராதிபதியின் ஈமைக்கிரியுடன் ஏற்பட்ட இந்து பௌத்த சண்டையை இதற்கான சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். முல்லைத்தீவின் பிரபல்யமானதொரு பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான காணியிலேயே இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விகாரை யுத்த காலகட்டத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பொதுவாக கோவில் சார்ந்த இடங்களில் ஈமைக்கிரியைகள் நடாத்தப்படுவதில்லை என்பது இந்துக்களால் பின்பற்றப்படுகின்ற ஒரு நடைமுறையாக காணப்படுகின்றது.

விகாரையின் தலைமைப் பிக்குவின் ஈமைக்கிரியை கோவில் காணியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கோவில் நிர்வாகிகள் ஊடாக நீதிமன்றத்திடம் தடையுத்தரவொன்று கோரப்பட்டிருந்தது. விகாரையின் தலைமைப் பிக்குவின் ஈமைக்கிரியையை கோவில் காணியில் நடாத்துவதற்கு தடை விதித்ததுடன் பொறுத்தமான வேறு ஒரு இடத்தையும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

கலகொட அத்தே ஞானசார தேர் உட்பட தெற்கிலிருந்து குறித்த பிரதேசத்திற்கு சென்றிருந்த பிக்குகள் குழுவொன்றே இந்த பிரச்சினைக்கு தலைமை தாங்கியது. குறித்த பிக்குகள் குழுவினர் நீதி மன்றத்தின் தீர்ப்பினை மதிக்காமல் கோவில் காணியிலேயே ஈமைக்கிரியையை செய்துமுடித்தனர். நீதிமன்ற உத்தரவினைக் காண்பித்து இந்த செயற்பாடுகளைத் தடுக்கமுயன்ற ஒரு சட்டத்தரணி உற்பட இரண்டு தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். அங்கு கடமையில் இருந்த பொலிசார் நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க செயற்படாது ஞானசார எனும் பிக்குவின் உத்தரவிற்கு இணங்கவே செயற்பட்டனர். ஞானசார பௌத்த பிக்கு உட்பட மற்றைய பிக்குகள் மாத்திரமன்றி பொலிசார் கூட நீதிமன்ற உத்தரவிற்கு மாற்றமாகவே செயற்பட்டிருந்தனர். நாடு எந்த அளவு சீரழிவுக்கு உட்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழ் மக்கள் தவறுதலாகவேனும் இந்த செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பார்கள் எனில் பாரியதொரு விபரீதத்தினை நாடு எதிர்நோக்க நேர்ந்திருக்கக்கூடும். மேற்படி சம்பவத்திற்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிப்பதற்காக நான்கு தினங்களாக நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து வடக்கின் வழக்கறிஞர்கள் விலகியிருந்தனர். இறுதியில் நீதவான் தலையிட்டு இது தெடர்பில் நீதமான முடிவென்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததனைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் தமது ஆர்பாட்டத்தினை கைவிட நேர்ந்தது.

அரசாங்கத்தின் அழுகல் நிலை

சமூக கட்டமைப்பில் நிலவுகின்ற சிக்கலான நிலை இன்னும் மோசமாக விடாமல் அவசரமாக தீர்வு காணப்படவேண்டிய முக்கியமான விடயமாகக் கொண்டு அதற்காக தீர்வு காணப்படல் வேண்டும். அத்துடன் நாட்டின் அரசாங்கமாகது ஊழல் அதிகரித்து அழுகிப்போன நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். இன்னும் காலம் தாழ்த்தாது தீர்வுகாணப்பட வேண்டிய முக்கியமான விடயமாகவும் இது கருதப்படல்வேண்டும்;.

அரசாங்கத்தின் அழுகல் நிலையினை கோதாபயவின் வழக்கு விசாரணையின் ஊடாக தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகின்றது. விசாரணையின் போது கோதாபய ராஜபக்சவின் கடவுச் சீட்டுடன் தொடர்புடைய விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இல்லை என்பதாக குடிவரவு குடியகல்வு நிர்வாகி சார்பில் தோன்றிய அரசின் பிரதி சொலிசிடர் ஜெனரால் நெரின்புள்ளே தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான மிக முக்கியமான நிறுவனம் ஒன்றாக கருதப்படும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நிலவுகின்ற சிக்கலானாதும் ஊழலானதுமான நிலைமை குறித்து இதன் ஊடாக புரிந்துகொள்ள முடியூம்.

தற்போது கடவூச்சீட்டுகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணனி மென்பொருள் ஒன்றின் ஊடாகவே குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது கடவுச் சீட்டுகள் வினியோகிக்கப்படுகின்றன. அதன் ஊடாக எந்த விதமான களவுகளும் நிகழ்ந்துவிட வாய்ப்பில்லை என்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் கடவுச்சீட்டு பெறுவதற்காக கிராமசேவையாளரின் சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் புகைப்படத்தில் இருப்பவரது ஆள்அடையாளம் உறுதிப்படுத்தல் என்பன அவசியமானவையாகக் காணப்பட்டன. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முறையில் இது போன்ற யாருடை உறுதிப்படுத்தல் சான்றிதழும் அவசியப்படுவதில்லை என்பதுடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரியிடம் திரும்ப வழங்கப்படுகின்றது.

முன்னைய முறையின் அடிப்படையில் போலியான கடவுச் சீட்டு பெறுவதற்காக இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு ஊழலுக்கான வாய்ப்புகள் திறந்துவிட்டிருக்கின்றது என்பதாக குறிப்பிடலாம். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கணனி முறையின் ஊடாக போலி ாஅடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன.

இது குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு மாத்திரமே உரியதொரு விடயமல்ல என்பதுடன் அரசாங்கத்தின் வருமானம் சேகரிக்கப்படுகின்ற பிரதான நிறுவனங்கள் அனைத்திலுமே காணப்படுகின்ற அசிங்கமானதொரு நிலையாகும்.

தவறுகளும் காரணங்களும்

நான் ஒரு கணனி தொடர்பான நிபுணத்துவம் பெற்றவனல்ல. எனினும் கனணிகளுடன் பொய்களுக்கு மோத முடியாது. கணனி அல்லது கணனி தொகுதி ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை கணக்காய்வூ ஊடாக இலவாக கண்டறிந்துகொள்ளலாம்.

ஊழல் மேசடிகளுக்கு இடம் கொடுக்காத அடிப்படையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்திலான மென்பொருட்கள் உலக நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் யாரோ ஒரு நிறுவனத்தினால் உருவாக்கி வழங்கப்பட்ட மென்பொருற்களே இலங்கையின் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற மென்பொருளொன்றை அதன் உச்ச தரத்தில் சர்வதேச சந்தை ஊடாக பெற்றுக் கொள்வதற்கான செலவை விட அதிக செலவிலேயே இங்கு பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அரச நிறுவனங்களின் தனித்துவத்திற்கு ஏற்ற விதத்தில் இவை அமைக்கப்பட வேண்டும் என்பதாக பெருமையடிக்கின்ற நிறுவனத் தலைவர்கள் அவர்களுக்கு ஏற்றாற் போல் தமது ஊழல் சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏற்றாற்போல் மென்பொருட்களை வடிவமைத்ததுக்கொள்கின்றனர்.

ஒற்றை செயற்பாடல்லாது பலவிதமன செயற்பாடுகளில் ஈடுபடுகின் சுபர்மார்கட் நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு இயங்குகின்றன. இந்த அடிப்படையில் ஜோன் கீல்ஸ் நிறுவனம் தனது அனைத்து நிறுவனங்களையூம் ளுயூP எனும் கனணி மென்பொருள் ஊடாக இணைத்து நிர்வகித்து வருகின்றது. எந்த ஒரு நேரத்திலும் அனைத்து கிளைகளினதும் விற்பனை,கொள்வனவு, கையிறுப்பு, இலாப நட்டம் என்பன தொடர்பான விபரங்களை கணனியை இயக்குகின்றவர்களுக்கு பெற்றுக்கொள்ளலாம். எங்கேனும் ஒரு தவறு ஏற்படுகின்றதாயின் அதனையும் கண்டுபிடித்துவிடலாம். முன்னிலையான தனியார் நிறுவனங்கள் நடாத்துகின்ற கணனித் தொகுதிகள் வினைத்திறன் மிக்கவையாக காணப்படுகின்ற அதே நேரம் பாரிய நிறுவனங்களாக குறிப்பிடப்படுகின்ற அரச நிறுனங்களின் கணனித் தொகுதிகள் வினைத்திறன் அற்று ஊழல்மிக்கதாக காணப்படுகின்றன.

பாரிய அளவில் அரச வருமானங்கள் சேகரிக்கப்படுகின்ற நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்ற கணனித் தெகுதிகளை கணக்காய்வுக்கு உட்படுத்தல் ஊடாக தவறுகளை இலகுவில் கண்டறிந்துகொள்ளலாம். அதன் ஊடாக ஊழல்களுக்கும் தவறுகளுக்கும் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளை கண்டறியலாம். குற்றம் செய்திருக்கும் அனைவருக்கும் தண்டனைகளையும் பெற்றுக்கொடுக்கலாம். அத்துடன் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கணனித் தொகுதிகளில் யாரும் மாற்றம் ஏற்படுத்த முடியாத அமைப்பில் வடிவமைத்து அரச வருமானத்தில் பாரிய புரட்சியொன்றையே ஏற்படுத்தலாம். இதன் ஊடாக நிறுவனங்களில் நடைபெறுகின்ற ஊழலை குறைத்து வினைத்திறனை அதிகரிக்கலாம்.

தோல்வியை வெற்றிகொள்ளல்

வினைதிறன் அற்று ஊழல் நிறைந்ததாகவே இன்றைய அரசாங்கம் காணப்படுகின்றது. அரசின் அனைத்து கருமங்கள் குறித்தும் ஆராயப்பட்டு கட்டமைப்புரீதியிலான மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுதல் ஊடாகவே இந்த நிலையிலிருந்து சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமாக அமையும். முதல் கட்டமாக பாராளுமன்றம், நாட்டின் தலைமை, சட்டத்துறை, வரி வருமானம் சேகரிக்கும் நிறுவனங்கள் என்பன ஆராயப்ப வேண்டும். ஆரம்ப கட்டமாக அரசினது முக்கியமான பிரிவுகள் ஆராயப்படவேண்டும். கல்வி, சுகாதாரம், பொதுப்போக்குவரத்து, சக்தி கழிவு முகாமை, சுற்றாடல் போன்ற துறைகள் அடுத்தடுத்த கட்டங்களில் ஆராயப்பட வேண்டும்.

எனினும் இது போன்றதொரு புனர்நிர்மாண திட்டத்திற்கு தலைமைத்துவத்தினை வழங்குகின்ற இயலுமை இன்றைய பாராளுமன்றத்திடம் காணப்படுவதில்லை. உச்ச அளவில் ஊழல் கொண்டதாகவே இன்றைய பாராளுமன்றம் காணப்படுகின்றது.

மக்கள் சார்ந்த அரசியல் யாப்பு உருவாக்கம் ஒன்றின் உருவாக்கத்தின் ஊடாக மாத்திரமே பூரணமான சீர்திருத்தமொன்றுக்கான செயற்திட்டத்தினை வெற்றிகரமாக ஆரம்பிக்கமுடியும். மக்கள் யாப்பு என்பது நாட்டின் அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துதற்காக பயன்படுத்திக்கொள்ள முடியுமான சிறந்ததொரு பொறிமுறையாகும். இவ்வாறான செயற்றிட்டத்தின் பிரதான பலமாக மதிக்கப்டுவது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையல்ல பொதுமக்களேயாவர். மக்கள் யாப்பு ஒன்று அமைப்பதன் நோக்கமானது யாப்பு வரைவுகளுடன் மாத்திரம் நின்றுவிடாது சகல துறைகளும் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் முறையான மாற்றங்களை ஏற்படுத்தும் அடிப்படையிலான யாப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக அமைதல் வேண்டும்.

Advertiesment